நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காடச்சநல்லூன் பகுதியைச் சேர்ந்த தம்பதி மஞ்சுநாதன், ராஜேஸ்வரி. இவர்கள் இன்று பிற்பகல் துணிகளை துவைக்க பள்ளிப்பாளையம் அருகே உள்ள கால்வாய்க்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கால்வாயில் உள்ள பள்ளத்தில் ராஜேஸ்வரி சிக்கிக்கொண்டதாகவும் அவரை காப்பாற்ற கணவர் முயன்றபோது இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் இருவர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்த தந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்ற மகன்!