நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் 2009ஆம் ஆண்டு குடும்பத் தகராறில் அமராவதி என்ற இளம்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலைசெய்யப்பட்டார். அமராவதி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவர் நல்லசாமி, மாமனார் பழனியப்பன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று (பிப். 16) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தந்தை, மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
அதேபோன்று 2016 ஜூன் 6ஆம் தேதி 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சதீஷுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: நீலகிரியிலிருந்து கோபிக்கு காய்கறிகள் கொண்டுவர நடவடிக்கை!