ETV Bharat / state

வாழைப் பழங்களை அரசு கொள்முதல் செய்ய  விவசாயிகள் கோரிக்கை - Government procures bananas

நாமக்கல்: விற்பனை ஆகாமல் மரத்திலேயே பழுத்து விழும் வாழைப்பழங்களை, அரசு காய்கறிகளை கொள்முதல் செய்து இலவசமாக வழங்குவது போல், பொதுமக்களுக்கு வாழைப்பழங்களையும் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல்: விற்பனையாகாமல் மரத்திலேயே பழுத்து விழும் வாழைப்பழங்களை அரசு காய்கறிகளை கொள்முதல் செய்து இலவசமாக வழங்குவது போல் பொதுமக்களுக்கு வாழைப்பழங்களையும்  வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author img

By

Published : May 11, 2020, 11:12 PM IST

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி, பட்லூர், இறையமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வெளிமாவட்ட வியாபாரிகள் வராததாலும்; வேலைக்கு ஆட்கள் வராததாலும், வாழைத்தார் மரத்திலேயே பழங்கள் பழுத்து பறவைகளுக்கு இரையாவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகளவு கோயில் திருவிழாக்களும் பூஜைகளும் நடைபெறும் காலம் என்பதால், பூவன் வாழைப்பழம் அதிகளவில் பயன்படும் எனக்கருதி, திருச்செங்கோடு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் பூவன் வாழை மரத்தையே நடவு செய்துள்ளனர்.

ஊரடங்கால் வாழைப்பழங்கள் அறுவடை செய்ய முடியாமல், ஏக்கர் ஒன்றிற்கு நான்கு லட்சம் ரூபாய் வரையில், வருவாய்‌ இழந்து வருவதாகவும்; தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுபோல், வாழைப்பழங்களையும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

'அரசுகளுக்கு எங்களைப் பற்றி கவலையும் இல்லை, கருணையும் இல்லை' - வாழை விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.