ETV Bharat / state

மாநில அளவிலான 10ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டி - மாவட்ட ஆட்சியர்

நாமக்கல்: மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10-ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார்.

Namakkal
author img

By

Published : Jul 19, 2019, 7:56 PM IST

மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார். இப்போட்டிகளை, தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகம், நாமக்கல் மாவட்ட வாள் விளையாட்டுக் கழகம், தனியார் கல்லூரிகள் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதில் 18 மாவட்டங்களிலிருந்து வாள் விளையாட்டு வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.

மினி வாள் விளையாட்டுப் போட்டி

10, 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில், சேபர்(Sabre), எப்பி(Epee), ஃபாயில்(Foil) ஆகிய மூன்று விதமான வாள் விளையாட்டுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது.

இப்போட்டிகளில், அதிக புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 6, 7, 8ஆம் தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான வாள் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட இருக்கிறார்கள்.

Intro:மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10-ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார்Body:மாநில அளவிலான முதலாவது குழந்தைகள் மற்றும் 10-ஆவது மினி வாள் விளையாட்டுப் போட்டிகளை நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் இன்று தொடங்கி வைத்தார். இப்போட்டிகளை, தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகம், நாமக்கல் மாவட்ட வாள் விளையாட்டுக் கழகம், தனியார் (செல்வம்) கல்லூரி ஆகியவை இணைந்து நடத்துகின்றனர். இதில் நாமக்கல், கரூர், ஈரோடு, மதுரை, சென்னை, வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து வாள் விளையாட்டு வீரர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.

10 & 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவுகளில், சேபர்(Sabre), எப்பி(Epee), பாயில்(Foil) ஆகிய மூன்று விதமான வாள் விளையாட்டுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, 3 நாள்கள் நடைபெறும் இப்போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது.

இப்போட்டிகளில், அதிக புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெறும் தேசிய அளவிலான வாள் விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் விளையாடினர்.

இன்றையப் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகத் தலைவர்-முன்னாள் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் Y. ஜான் நிக்கல்சன், கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பொ.செல்வராஜ், தமிழ்நாடு-புதுச்சேரி பார் வழக்கறிஞர்கள் சம்மேளன தலைவர் எஸ்.கே.வேல், தமிழ்நாடு வாள் விளையாட்டுக் கழகப் பொதுச் செயலாளர் P.வரதராஜன், விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.