உலக ஓட்டுநர்கள் தினம் நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் கோவை மண்டல காவல்துறைத் தலைவர் பாரி மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த விழாவில் பேசிய முன்னாள் கோவை மண்டல காவல்துறைத் தலைவர் பாரி ”ஓட்டுநர்கள் வலிமையாக இருக்கவேண்டும். வாகனத்தை இயக்கும்போது தூக்கம் வரக்கூடாது என அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். அதன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். வாகனங்களில் வேகக் கட்டுப்பாடு கட்டாயம் பொருத்தவேண்டும்" என்றார்.
மேலும், படித்த இளைஞர்கள் ஓட்டுநராக வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் அனைவரும் இந்தியாவின் முதல் கனரக வாகனங்களை இயக்கும் பெண் ஓட்டுநரான சரண்யாவை கௌரவித்தனர்.