திருச்செங்கோட்டை அடுத்த பிள்ளாநத்தம் கிராமம் செட்டியாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராம் (26). இவர் கடந்த பிப்ரவரி மாதம் திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். இதில் திருச்செங்கோடு வட்டார பள்ளிகளுக்கு அரசு வழங்கும் இலவச பாடபுத்தகங்கள், சீருடைகள், காலணிகள், மடிக்கணினி, மிதிவண்டி வழங்குவதற்கான பணிகள் மற்றும் பள்ளி கல்வித்துறையின் வழக்கமான பணிகளை கவனித்து வந்துள்ளார்.
திருச்செங்கோடு கல்வி மாவட்டமாக பிரிந்த நிலையிலும், நாமக்கல் கல்வி மாவட்ட பணிகளையும் இவரே கவனித்து வந்துள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிய மோகன் ராம், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் மயக்கமடைந்த மோகன்ராமை சக ஊழியர்கள் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.