ETV Bharat / state

சாலையோரம் வீசப்படும் இறந்த கோழிகள் - தொற்று நோய் பரவும் அபாயம்!

author img

By

Published : Mar 13, 2020, 5:11 PM IST

Updated : Mar 13, 2020, 6:24 PM IST

நாமக்கல்: சாலையோரத்தில் வீசப்பட்ட இறந்த கோழிகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதற்கு உடனடியாக அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரம் வீசப்படும் இறந்த கோழிகள் நாமக்கல் சாலையோரம் வீசப்படும் இறந்த கோழிகள் இறந்த கோழிகள் Dead chickens thrown by the roadside Dead chickens thrown at Namakkal roadside Dead chickens
Dead chickens thrown by the roadside

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, ஆண்டாபுரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகளை உயிரியல் பாதுகாப்பு முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்தவெளியில் சாலையோரமாக வீசிச் செல்லும் நிலை தொடர்ந்து நிலவி வருவதாகப் அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தற்போது கோழிகளுக்கு கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புள்ள நிலையிலும், கோழிகள் மூலம் 'கொரோனோ வைரஸ்' பரவுவதாக வாட்ஸ் ஆப்பில் வந்த வதந்திகளாலும் கோழி இறைச்சிகளை பொதுமக்கள் சாப்பிட அச்சமடைந்துள்ளனர். இதனிடையே, கறிக்கோழி விலையும் கடுமையாகச் சரிவடைந்துள்ளது.

சாலையோரம் வீசப்பட்ட இறந்த கோழிகள்

இந்நிலையில், இறந்த கோழிகளை சாலையோரத்தில் வீசி செல்பவர்கள் மீது அரசு அலுவலர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:இறைச்சி கடைகளில் இறந்த கோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

Last Updated : Mar 13, 2020, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.