ETV Bharat / state

சுயேச்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம் - குக்கர் சின்னம்

நாமக்கல்: குக்கர் சின்னத்தை பெற்ற சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சின்னத்தை சுமந்தவாறே வாக்கு கேட்கும் நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

குக்கர் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்
author img

By

Published : Apr 2, 2019, 8:01 AM IST

தமிழகத்தில் வருகின்ற 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் போராடி வந்த குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளருக்கு தேர்தல் ஆணையும் அளித்துள்ளது.

குக்கர் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம்

கட்சி பதிவு செய்தால் மட்டுமே விரும்பிய சின்னத்தை அளிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அவரது கோரிக்கையை நிராகரித்து பரிசுபெட்டி சின்னத்தை வழங்கியது. இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர் சுயேச்சை வேட்பாளர் சக்திவேல். இவர் சக்தி அறக்கட்டளை என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியுள்ளது.

இவர் தற்போது டிடிவி.தினகரன் பாணியில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதால் குக்கரை சுமந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வெற்றிப்பெற்றார். அதே போல் சுயேச்சை வேட்பாளர் சக்திவேலும் தன்னுடன் எப்போதும் குக்கர் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:நாமக்கல்லில் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு குக்கர் சின்னம் வழங்கிய தேர்தல் ஆணையம் - மகிழ்ச்சியில் சுயேச்சை வேட்பாளர்

Body:தமிழகத்தில் வருகின்ற 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.ஒருபுறம் குக்கர் சின்னத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போராடினார். கட்சி பதிவு செய்தால் மட்டுமே விரும்பிய சின்னத்தை அளிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அவரது கோரிக்கையை நிராகரித்து பரிசுபெட்டி சின்னத்தை வழங்கியது. தமிழகம் முழுவதும் குக்கர் சின்னம் என்றாலே அமமுகவின் சின்னம் என மக்களின் மனதில் பதிந்தது. தற்போது பரிசுபெட்டி சின்னம் அளித்ததால் மக்களின் மனதில் சின்னம் பதிய சற்று நாளாகும்.

இந்நிலையில் நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சக்திவேல். இவர் சக்தி அறக்கட்டளை என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார். இவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியுள்ளது.இதனால் சுயேச்சை வேட்பாளர் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.

இதுகுறித்து அவரிடம் பேசும்போது தனக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் வழங்கியது.அதற்காக மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். தான் வெற்றி பெற்றால் நாமக்கல் மாவட்ட மக்களின் பிரதான கோரிக்கையான முட்டை கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்.இதற்கு முன்பு இருந்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் முட்டைக்கு தனி மண்டலம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அநத வாக்குறுதியை நிறைவேற்றவே இல்லை . தான் வெற்றிபெற்றால் முட்டைக்கென தனி மண்டலம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

இவர் தற்போது டிடிவி.தினகரன் பாணியில் வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதால் குக்கரை சுமந்து கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டு வெற்றிப்பெற்றார். அதே போல் சுயேச்சை வேட்பாளர் சக்திவேலும் தன்னுடன் எப்போதும் குக்கர் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:மேலும் சென்ற இடமெல்லாம் தனக்கு மிகுந்த வரவேற்பு உள்ளதாகவும் நிச்சயமாக வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.