நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில், ஓய்வு பெற்ற செவிலி அமுதவள்ளியின் சகோதரர் நந்தகுமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று சரணடைந்தார். இதையடுத்து, திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, நந்தகுமாரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இவரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர். இதற்காக, நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி முன்பு இன்று மாலை நந்தகுமார் ஆஐர்படுத்தப்பட்டார். அப்போது, நந்தகுமாரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினருக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் மீண்டும் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.