ETV Bharat / state

'இந்தியை திணிக்கும் எண்ணத்தை மத்திய அரசு அடியோடு மாற்ற வேண்டும்' - இந்தி

நாமக்கல்: தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கும் எண்ணமிருந்தால் மத்திய அரசு அதை அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

kongu eeswaran
author img

By

Published : Jun 2, 2019, 10:06 AM IST

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை வெற்றிபெற செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈஸ்வரன்,

'தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எந்த ஒரு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பல நேரங்களில் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் இந்தியை திணிப்பதற்கான கட்டாயத்தில் அதற்கான முயற்சிகள் செய்தாலும் எப்போதும் வெற்றிபெற்றது கிடையாது.

விருப்பம் உள்ளவர்கள் இந்தி மொழியைக் கற்றுக்கொள்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் ஒருபோதும் இந்தியை கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே மத்திய அரசு இதுபோன்ற எண்ணங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

செய்தியாளர்களை சந்தித்த ஈஸ்வரன்

நாமக்கலில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மக்களவை உறுப்பினர் சின்ராஜ் எடுத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட 37 எம்.பி.க்களும் தமிழ் மக்கள் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை.

ஆனால் தற்போது திமுக கூட்டணியில் வெற்றிபெற்றுள்ள அனைத்து எம்பிக்களும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக கேட்டுப்பெற்று உரிமையை மீட்டுத் தருவார்கள்' என அவர் கூறினார்.

Intro:தமிழகத்தில் இந்தியை திணிக்கும் எண்ணமிருந்தால் மத்திய அரசு அடியோடு மாற்றிக்கொள்ளவேண்டும் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

Body:நாமக்கல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை வெற்றி பெற செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் தமிழகத்தில் இந்தி திணிப்பை எந்த ஒரு தமிழனும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பல நேரங்களில் மத்தியில் ஆட்சியை இருப்பவர்கள் இந்தியை திணிப்பதற்கான கட்டாயத்தில் அதற்கான முயற்சிகள் செய்தாலும் எப்போதும் வெற்றி பெற்றது கிடையாது. இந்தியை விருப்பம் இருக்கிறவர்கள் கற்றுக்கொள்வதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் ஒருபோதும் இந்தியை கட்டாயப் படுத்தி திணிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மத்திய அரசு அப்படிப்பட்ட எண்ணங்களை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நிலவுகின்ற தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட எல்லா அதிகாரிகளையும் சந்தித்து பேசி இருக்கிறார். திருமணிமுத்தாறு திட்டத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று முடிவோடு இருப்பதாகவும் வெற்றி பெற்று அடுத்த நாளில் இருந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தண்ணீர் பஞ்சத்தை போக்க அதற்கான பணிகளை துவங்கி இருப்பதாகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து சென்ற முறை அதிமுக சார்பில் சென்ற 37 எம்பிக்களும் தமிழகத்தின் நலனுக்காக ஒன்றும் செய்யவில்லை. அதே போல் தங்களையும் அவர்கள் அவ்வாறு நினைத்துவிட்டார்கள். அந்த காரணத்தினால் தங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். கடந்த முறை வெற்றி பெற்றவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லை. அதேபோல் பிரதமர் மோடியும் விவசாயிகளை சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். எனவே இன்றைக்கு நிலைமை அதுவல்ல. தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அனைத்தையும் திமுக கூட்டணியில் தற்போது வெற்றி பெற்றுள்ள அனைத்து எம்பிக்களும் கேட்டுப் பெறுவதற்கு தயாராகியுள்ளனர். நிச்சயமாக அவர்கள் தமிழகத்தின் உரிமையை அவர்கள் மீட்டு தருவார்கள் எனவும் அவர் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.