நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த நிலத்தரகர் பூபதியும் (45) அவரது நண்பர் குமாரும் சொந்தப் பணியின் காரணமாக நாமக்கல் பொன்நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அவர்கள் அப்பகுதியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, சேலத்திலிருந்து நாமக்கல் வந்த அரசுப் பேருந்தின் முன்பாகத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனம் சிறிது தூரம் இழுத்துச் சென்ற நிலையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய பூபதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த குமார் படுகாயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அண்ணனைத் தீர்த்துக்கட்டிய தம்பி - கொலைக்கான காரணம் குறித்து அலசும் போலீஸ்!