ETV Bharat / state

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக புகார் - நாமக்கல் ஆர்.எஸ்.பாரதி மீது புகார்

நாமக்கல் : திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் புகார் மனு அளித்தனர்.

Admk IT wing Petition about DMK R.S.Bharathi

author img

By

Published : Feb 11, 2021, 9:21 PM IST

நேற்று முன்தினம் அம்பத்தூரில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார். இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று(பிப்.11) நாமக்கல் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி தலைமையில் 50க்கும்‌ மேற்பட்ட அதிமுகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் இந்த புகார் மனுவை அளித்தனர்.

ஆர்.எஸ்.பாரதி மீது புகார் மனு அளித்த அதிமுகவினர்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் முரளி பாலுச்சாமி, முதலமைச்சர் பெயருக்கு அவதூறு ஏற்படும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஆர்.எஸ்.பாரதி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காட்டு யானையை பிடிப்பதில் தொய்வு: மருத்துவர்கள், வனத்துறையினரிடையே கருத்து வேறுபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.