ETV Bharat / state

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 2,200 வழக்குகள் விசாரணை - மக்கள் நீதிமன்றம்

நாமக்கல்: மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்றுவரும் மக்கள் நீதிமன்றங்களில் 2200 வழக்குகள், ஆறு அமர்வுகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மக்கள் நீதி மன்றத்தில் குவித்த பொதுமக்கள்

author img

By

Published : Dec 12, 2020, 2:44 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்றங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் இன்று நடைபெற்றன.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மூன்று அமர்வுகள், ராசிபுரம், பரமத்தி, திருச்செங்கோடு ஆகிய நீதிமன்றங்களில் தலா ஒன்று என மொத்தம் ஆறு அமர்வுகளில் நடைபெற்றன. இதில் மொத்தம் 2,200 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கூடுதல் பொறுப்பு கே. தனசேகரன் தலைமையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மக்கள் நீதி மன்றத்தில் குவித்த பொதுமக்கள்
மக்கள் நீதி மன்றத்தில் குவித்த பொதுமக்கள்

இதில் சாலை விபத்துகள் குறித்த இழப்பீடு, நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஓய்வூதியம், ரிட் மனுக்கள், காசோலை மோசடி, திருமண விலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன், இழப்பீடு வழக்குகள், கல்விக் கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள், இதர பொது பயன்பாட்டு வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளில் வழக்காடுபவர்கள் நேரடியாக பங்கேற்று, இழப்பீடு தொகை மற்றும் பிற பிரச்னைகளை இரு தரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் மக்கள் நீதி மன்றங்கள் வழிவகை செய்கின்றன.

இதையும் படிங்க: நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.