ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன், வருமானவரியை 1860 ஜூலை 24ஆம் தேதி அறிமுகப்படுத்தினார். அதனால் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24ஆம் தேதி வருமானவரி தினமாக கொண்டாடப்படுகிறது.
159ஆவது வருமானவரி தினம் இன்று வருமானவரித் துறையால் கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு வருமானவரித் துறை அலுவலகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை வருமானவரி அலுவலர் கமலக்கண்ணன் தொடங்கிவைத்தர்.
![trichengode 159th-income tax day awarness rally 159-ஆவது வருமான வரி தினம் கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நாமக்கல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3937854_income-tax-4.bmp)
பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி நான்கு ரத வீதிகள் வழியாக சென்று வருமானவரி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர் கலந்துகொண்டு "வரி செலுத்துவோம் நாட்டை வளமாக்குவோம்" என்ற விழிப்பணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டிகளை ஏந்திச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருமானவரி அலுவலர் ஜெயராமன், ஆய்வாளர்கள் அப்துல் ரசீத், பொன்னையா, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.