மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தரங்கம்பாடியில் உறவினர் வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். இச்சூழலில் அவர் தனது சொந்த ஊருக்கு பெற்றோரை காண வந்திருக்கிறார். அப்போது, அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்ததுடன் ரகசிய திருமணமும் செய்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் அச்சிறுமியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அப்புகாரின் பேரில் காவல் துறையினர், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் குழந்தை திருமண தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 17 லட்சம் திருட்டு!