ETV Bharat / state

தலைக்கவசம் மறந்தால் அனுமதி இல்லை - நாகை எஸ்பி அதிரடி - nagai sp rajasekaran

நாகை: இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள், காவலர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அலுவலகத்துக்குள்ளே அனுமதிக்கப்படுவர் என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாகை எஸ்.பி
author img

By

Published : Jul 25, 2019, 11:17 AM IST

நாகை மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களை காவல் துறையினர் கண்காணித்து அவர்களிடம் அபராத தொகையை வசூலித்து வருகின்றனர். தற்போது புதியதாக பதவியேற்றுள்ள நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, 'மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகாரளிக்கவரும் பொதுமக்கள், துறை சார்ந்த காவலர்கள் என அனைவரும் தங்கள் இருசக்கர வாகனத்தில் வரும் பட்சத்தில், அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி' என்று அறிவிப்புப் பலகையை அலுவலகத்தின் முகப்பில் வைத்து அதனை செயல்படுத்திவருகிறார்.

காவல் கண்காணிப்பாளர் வைத்துள்ள அறிவிப்பு பலகை

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இதுபோன்று அனைத்து அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்.

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் அனைவரும் தலைக்கவசம் தவறாமல் அணிவதற்கு ஒரு உந்துதலாக அமையும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Intro:ஹெல்மெட் இல்லை : அனுமதி இல்லை -
எஸ்.பி அதிரடி

Body:ஹெல்மெட் இல்லை : அனுமதி இல்லை. எஸ்.பி அதிரடி

தலைகவசம் அணிவது குறித்து காவல்துறையினர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும், அதனை சாலைகளில் மக்கள் பின்பற்றுகிறார்களா? என்றால் பெரும்பாலான மக்கள் அதனை, தங்கள் காதுகளில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாதவர்களை காவல்துறையினர் கண்காணித்து அவர்களுக்கு, அபராதத் தொகையும் வசூலித்து வருகின்றனர்.

இருப்பினும், தலைக்கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கையை சாலைகளில் கணிசமாக காண முடிகிறது.

தற்போது புதியதாக பதவியேற்றுள்ள நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒன்றாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த காவலர்கள் அனைவரும் தங்கள் இரு சக்கரத்தில் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தலைக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதி என்ற விளம்பர பலகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகப்பு பகுதியில் வைத்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது போன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள உயர் அதிகாரிகள் செயல்பட தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.