ETV Bharat / state

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பு: பிரச்னை சரியாகி விடுமா?

author img

By

Published : Dec 23, 2020, 9:47 PM IST

மயிலாடுதுறை: பாதாள சாக்கடைக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பாதாள சாக்கடை குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடையில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில் ஆறுபாதி கிராமத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுபாதி கிராமத்திற்குச் செல்லும் பாதாள சாக்கடைக் குழாயில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 16 முறை உடைப்பு ஏற்பட்டது.

பாதாள சாக்கடைக் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

உயிர்சேதம் ஏற்படும் முன்பு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, தரங்கம்பாடி சாலையில் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர். பாதிக்கப்பட்ட இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

இதுகுறித்து அப்பகுதி வாசி ஆனந்த் தெரிவித்ததாவது, "பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கியதில் இருந்து அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாகப் பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏற்பட்ட பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பை, தற்போது தான் சரிசெய்கின்றனர். இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அப்போது போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்பட்டன" என்றார்.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் சுப்பையாவிடம் கேட்டபோது, "பாதாள சாக்கடைக் குழாய் உடைப்பு அவ்வப்போது சரிசெய்யப்பட்டு வருகிறது. ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடைக் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இதையும் படிங்க: போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத கோயில் மற்றும் சுற்றுலா நகரங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.