ETV Bharat / state

மயிலாடுதுறையில் வாகனங்கள் செல்ல தடை!

author img

By

Published : May 5, 2020, 8:41 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முக்கியச் சாலைகளில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் வாகனங்கள் செல்லத் தடை
மயிலாடுதுறையில் வாகனங்கள் செல்லத் தடை

கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் அதிகமாகப் பரவி வரும் நிலையில் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள மண்டலங்களில், ஊரடங்கில் நேற்று முதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். மேலும் அவர்கள் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமலுக், முகக்கவசம் அணியாமலும் அச்ச உணர்வு இன்றி வெளியே சுற்றி வருகின்றனர்.

இதையடுத்து மயிலாடுதுறையில் காவல் துறையினர் கடைவீதியில் பொதுமக்கள் வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் முக்கியக் கடைவீதிகளான பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருள்களை வாங்குவோர் நடந்தே செல்ல வேண்டும் என்றும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களைப் பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே கரோனா தொற்றிலிருந்து விடுபட முடியும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: அதிக வட்டி கேட்ட அடகு நிறுவனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.