ETV Bharat / state

தமிழ்நாட்டைப் பயமுறுத்தும் கொரோனா - நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டு - Coronavirus Affects Tamil Nadu

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டை பயமுறுத்தும் கொரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டது.

corona-virus
corona-virus
author img

By

Published : Mar 5, 2020, 6:06 PM IST

உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்தது போல் காணப்பட்டாலும் கொரோனாவின் கொடூர முகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் உறைந்துள்ளனர். இதனைத் தடுக்க மருத்துவத் துறை தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் 30 பேருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, இந்திய மக்கள் பீதியடைந்துள்ளனர். மருத்துவத்துறை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வோடு இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் ஆண்களுக்கு இரண்டு படுக்கைகளும், பெண்களுக்கு இரண்டு படுக்கைகளும் தனித்தனி அறைகளில் போடப்பட்டுள்ளன.

மேலும் குடிநீர், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு தேவையான கையுறை, செனிட்டரி போன்ற கை கழுவும் திரவங்களும் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பில் மீட்க நடவடிக்கை எடுக்கும் மருத்துவர்கள்

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், "பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் தயாராக உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்.

அவர்கள் செல்வதற்கு தனி வழி ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் கொரோனா குறித்து எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அரசு மருத்துவமனை அல்லது அந்தந்த சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். மருந்து கடைகளில் ஊசி போட வேண்டாம்" என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: ரஜினிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.