உலகம் முழுவதும் 'கொரோனா வைரஸ்' பாதிப்பு தீவிரமடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவருகின்றனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பல்வேறு விழிப்புணர்வுப் பரப்புரைகளையும் மக்களிடையே செய்துவருகின்றன.
கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற சனீஸ்வரர் பகவான் கோயிலில் வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வரும் கோயில்களில் ஒன்றாகத் திகழும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கையாக இருமல், சளி, ஜலதோஷம் உள்ளவர்களும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களும் 28 நாள்கள் வரை கோயிலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவுத்துயுள்ளார்.
இதையும் படிங்க:ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு