மயிலாடுதுறை மாவட்டம் திருமணஞ்சேரியில் புகழ்பெற்ற உத்வாகநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த ஆலயம், கல்யாணசுந்தரமூர்த்தி சுவாமி, கோகிலாம்பாள் அம்பிகையை இங்கு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகின்றது.
திருமணத்தடை உள்ளவர்களும் நீண்ட நாள்களாக வரன் அமையாதவர்களும் இங்கு நாள்தோறும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்துவந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் நடைபெறம் திருக்கல்யாண வைபவ விழா கடந்த 19ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி இன்று (ஏப். 21) கோகிலாம்பாள் சமேத ஸ்ரீஉத்வாகநாத சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, சுவாமி, அம்பாள், திருமணம் நடைபெறும் இடத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். அங்கு வேதியர்கள் மந்திரம் முழங்க, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து குறைந்த அளவு பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர்.
இதையும் படிங்க: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளை சமர்ப்பிக்க உத்தரவு