ETV Bharat / state

நடுக்கடலில் மீனவர்கள் மீது தாக்குதல்... 7 பேர் காயம்! - tharangambadi fishermen attacked

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தரங்கம்பாடி மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

tharangambadi fishermen attacked
tharangambadi fishermen attacked
author img

By

Published : Jul 9, 2020, 1:45 PM IST

நாகப்பட்டினம்: தரங்கம்பாடி மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் ஆகியன மூலம் கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இதற்கு ஆதரவாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பகுதியைச் சேர்ந்த 20 கிராம மீனவர்கள் சுருக்குமடி, இரட்டைமடி வலைகள், அதிவேக எஞ்சின் பொருத்திய விசைப்படகை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் தரங்கம்பாடி மீனவர் கூட்டமைப்பு சார்பில் பலமுறை அரசுக்கும், மீன்வளத்துறை அலுவலர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர். இச்சூழலில் ஜூலை 9ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் சுதர்மேன் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவருடன் சக்திவேல், சுப்பிரமணியன், சின்னையன், அருண்குமார், ஆறுமுகம், திலீப் ஆகியோர் தரங்கம்பாடி அருகே சுமார் 6 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாடகை கேட்ட வீட்டு உரிமையாளர் கழுத்தறுத்து கொலை - இளைஞர் கைது

அப்போது பெரிய விசைப்படகில் சுருக்குமடி வலையுடன் வந்த காரைக்கால் பகுதி மீனவர்கள், தரங்கம்பாடி மீனவர்கள் விரித்த வலையின் அருகிலேயே சுருக்குமடி வலையை வீசியதாகத் தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்களை, காரைக்கால் பகுதி மீனவர்கள் மரக்கட்டை, இரும்பு பைப் கொண்டு தாக்கிவிட்டு, படகு, என்ஜினை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த மீனவர்கள் ஏழு பேரும் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்களுக்கு கடலில் இருந்து தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பிற மீனவர்கள் உதவியுடன் ஏழு மீனவர்களும் மீட்கப்பட்டு தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மீனவர்கள்

தகவலறிந்த சீர்காழி மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன், தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா, கடலோர காவல் நிலைய காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.