தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் 50க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை அலுவலர்கள், காவலர்கள் தஞ்சாவூரிலிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை சைக்கிள் பயணம் மேற்கொண்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்புதுறை நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
அங்கு அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வரவேற்றார். அதையடுத்து தீயணைப்புத்துறை நிலையத்தில் சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார். சில மணி நேர ஓய்விற்குப் பின்னர் அங்கு சென்னை நோக்கி சைக்கிளில் புறப்பட்டார். நாளை (செப்டம்பர் 7) காலை சென்னை அடைய இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சைபர் குற்றம் குறித்து விளக்கும் டிஜிபி சைலேந்திர பாபு!