நாகை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, வழிபாட்டுத்தளங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
தளர்வுகளின்படி, மயிலாடுதுறையில் 102 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியைப்பின்பற்றி மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
நீண்ட இடைவெளிக்குப்பிறகு மதுக்கடைகள் திறந்ததை கொண்டாடும் வகையில், மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு, மதுப்பிரியர் ஒருவர் சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து மதுப்பாட்டில்களை வாங்கிச்சென்றார். முகக்கவசங்கள் அணிந்து வருபவருக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: மதுப்பிரியர்கள் மீதுதான் அரசுக்கு அக்கறையா - சமூக ஆர்வலர்கள் வேதனை