ETV Bharat / state

தடையை மீறி மது விற்ற டாஸ்மாக் ஊழியர் கைது - Tasmac employee arrested

நாகை: 144 தடை உத்தரவை மீறி மயிலாடுதுறையில் மது விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tasmac employee arrested for breaching liquor in curfew time

author img

By

Published : Apr 12, 2020, 1:02 PM IST

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், மக்கள் பொது இடங்களில் கூடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மதுபான கடைகளும் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவல் துறையினரின் பாதுகாப்புடன் தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் இரவு நேரத்தில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

நாகையில் தடையை மீறி மது விற்பனை

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், புதிய பேருந்து நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்துவந்த டாஸ்மாக் ஊழியர் மேகநாதனை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களையும், 22 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய கோவிந்தராஜன் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டில் கள்ளச்சாராயம் தயாரித்த நபர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.