மயிலாடுதுறை: கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்றுவருகின்றனர். இதனால் அனைவரும் செல்போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும் பாடங்கள் குறித்த படங்கள், காணொலிகளைப் பார்த்து மாணவர்கள் பயிலும் அதே நேரத்தில், அவர்கள் வீடியோ கேம் விளையாடுதல், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடவும் வாய்ப்புகள் அதிகம்.
இதன் பொருட்டு மாணவர்களின் கவனம் சிதறாமல் இருக்க மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி காணொலி வெளியிட்டுள்ளார்.
அதில் பேசிய அவர், "செல்போனில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தால் பெரும்பாலும் இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வழி உள்ளது. இதனால் செல்போனில் ஒரு சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் என்னென்ன மாற்றங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை