ETV Bharat / state

வீட்டுக்குள் புகுந்த ஏழு அடி நீள பாம்பு - வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பை வனப்பகுதியில் விட்ட விவசாயி

சீர்காழியில் வீட்டுக்குள் புகுந்த ஏழு அடி நீள பாம்பை பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விட்ட இயற்கை விவசாயி தினேஷ்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த ஏழு அடி நீளமுள்ள சாரைப் பாம்பு : வனப்பகுதியில் விட்ட இயற்கை விவசாயி

author img

By

Published : Dec 20, 2021, 9:39 AM IST

மயிலாடுதுறை :சீர்காழி மேலமாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள மணி என்பவரின் கூரை வீட்டில் ஏழு அடி நீளசாரைப்பாம்பு புகுந்து மறைந்து கொண்டது. இதனையடுத்து பாம்பு பிடி வீரர் புளிச்சக் காடு தினேஷ் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வீட்டிற்குள் நுழைந்த சாரைப் பாம்பு:

இதனையடுத்து அங்கு விரைந்த தினேஷ்குமார், 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்ததுடன், சாரைபாம்பு விவசாயிகளின் நண்பன் என்றும், அதனை அடிக்கவோ பயிற்சி இன்றி பிடிக்கவோ கூடாது என அறிவுறுத்தியதுடன் பாம்பை பாட்டிலில் அடைத்தார் .

வீட்டுக்குள் புகுந்த ஏழு அடி நீளமுள்ள சாரைப் பாம்பு : வனப்பகுதியில் விட்ட இயற்கை விவசாயி

பின்னர் மக்கள் நடமாட்டமில்லாத பாதுகாப்பான வனப்பகுதியில் சாரைப்பாம்பை விட்டார். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்து தினேஷ்குமாருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தரமற்ற உணவு சமைத்து அளித்த கிச்சன் மேற்பார்வையாளர்கள் இருவர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.