ETV Bharat / state

சரக்கு ரயில் மூலம் வந்த 2830 டன் அரிசி மூட்டைகள் - 2830 tons of rice bundles arrived

நாகப்பட்டினம்: தெலங்கானா ஜனத்நகர் பகுதியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 2830 டன் புழுங்கல் அரிசி மயிலாடுதுறை வந்தது.

சரக்கு ரயில் மூலம் வந்த 2830 டன் அரிசி மூட்டைகள்

author img

By

Published : Jan 29, 2021, 5:34 PM IST

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்த விலையில் குறிப்பிட்ட அளவு அரிசி மத்திய தொகுப்பிலிருந்து வழங்குகிறது. இந்த அரிசியை மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக்கழகம் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

அந்த அரிசியை பெற்று மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மாநில அரசுகள் விநியோகம் செய்கிறது. தெலங்கானா மாநிலம் ஜனத் நகர் என்ற ஊரில் உள்ள இந்திய உணவுக்கழகமானது தமிழ்நாட்டிற்கான மத்திய தொகுப்பு அரிசியில் 2830 டன் புழுங்கல் அரிசியை 46 பெட்டிகளில் சரக்கு ரயில் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைத்தது.

மயிலாடுதுறைக்கு வந்த அரிசி மூட்டைகளை சித்தர்காடு பகுதியில் உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு அலுவலர்கள் சென்று பார்வையிட்டு 150 லாரிகள் மூலம் அவற்றை ஏற்றி சித்தர்காடு இந்திய உணவுக்கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்து இருப்பு வைத்தனர்.

அங்கிருந்து தமிழ்நாடு அரசின் நிறுவனமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர் வாங்கிச்சென்று மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்புவர். அரிசி இறங்குவதை இந்திய உணவுக்கழக அலுவலர்கள் ரயில் நிலையத்திற்கு சென்று கண்காணித்தினர்.

இதையும் படிங்க:தெலங்கானாவிலிருந்து 2 ஆயிரத்து 500 டன் புழுங்கல் அரிசி வரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.