நாகை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 17 ஆயிரத்து 821 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் ஆண்கள், பெண்கள் உட்பட நாகை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 584 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 85.97% விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம் என்பது, இந்தாண்டு 87.45% என இரண்டு விழுக்காடாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதா, கடந்த ஆண்டு நாகை மாவட்டம் 29ஆவது இடத்திலிருந்ததாகவும், இந்த ஆண்டு 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கஜா புயலினால் வீடுகளையும், உடமைகளையும் நாகை மாவட்ட மாணவர்கள் இழந்து தவித்த போதிலும், ஆசிரியர்களின் ஊக்கத்தினால் இரண்டு இடம் இந்த ஆண்டு முன்னேறி வந்து உள்ளது. கஜா புயலின் போது, அனைத்து பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்களை ஒன்று திரட்டி பயிற்சி அளித்தோம்’ எனத் தெரிவித்தார்.