நடிகர் ரஜினிகாந்தின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை படித்துறை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் உள்ள மங்கள சனிபகவான் சன்னதியில், ரஜினிகாந்த் பூரண ஆயுளுடனும் நலமுடனும் வாழ வேண்டி, அவரது ரசிகர் மன்றத்தினர் சிறப்பு யாகம் நடத்தினர். சனி பகவானுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன.
தொடர்ந்து மயிலாடுதுறை புனித சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், சின்னக்கடை வீதியில் உள்ள அறைக்காஸ் தர்காவில் சிறப்புத் தொழுகையும் செய்து வழிபட்டனர்.
இதேபோல், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள கோசாமி மடத்தில், ரஜினியின் உடல் நலத்திற்காகவும், அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவும் வேண்டி கணபதி யாகம், நவகிரக யாகம், ஆயூஷ் யாகம் ஆகியவற்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரஜினி ரசிகர்கள், மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு மற்றும் உடைகள் அளித்தும் அவரது பிறந்தநாளை கொண்டாடினர்.
இதையும் படிங்க: அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின் ரஜினி பிறந்தநாள்: ரஜினி வேடத்தில் மாஸ் காட்டிய ரசிகர்கள்!