ETV Bharat / state

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை - புகைப்பட கண்காட்சி! - புகைப்படக்கலைஞர் பென்ட்விக்லூன்ட்

தரங்கம்பாடியில் இந்திய டேனிஷ் நல்லுறவை வளர்க்கும்விதமாக புகழ்பெற்ற டென்மார்க் நாட்டு புகைப்படக் கலைஞர் பென்ட்விக்லூன்ட், புகைப்படங்களுடன் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

புகைப்பட கண்காட்சி
புகைப்பட கண்காட்சி
author img

By

Published : Dec 9, 2021, 9:59 PM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் உள்ள இந்திய டேனிஷ் கலாசார மையத்தில் டென்மார்க் நாட்டினர் டேனிஷ் கலாசாரம் பற்றிய புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் தரங்கம்பாடிக்கு வந்த டேனிஷ் தரங்கம்பாடி சங்கத்தின் தலைவர் பால் பீட்டர்சன் தலைமையில் மூவர் குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தங்கள் நாட்டுக் கலாசாரத்தை எடுத்துக்கூறும் வகையில் டென்மார்க் நாட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் பென்ட்விக்லூன்ட் எடுத்த அரிய புகைப்படங்களைக் காட்சிப்படுத்தினர்.

பென்ட்விக்லூன்ட் புகைப்படங்களுடன் புகைப்படக் கண்காட்சி

அந்தப் புகைப்படக் கண்காட்சியினை இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் செயின்ட் தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் கருணா ஜோஸ்பின், ஓய்வுபெற்ற பேராசிரியர் மரிய லாசர், கல்லூரி பேராசிரியர் ஃப்ளாரன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டேனிஷ் கோட்டை - அரச குடும்பம் வருகை

தொடர்ந்து இந்தியா - டென்மார்க் கலாசார மையத்தின் தலைவர் பால் பீட்டர்சன் தலைமையிலான டென்மார்க் நாட்டினர் குழுவாகச் செய்தியாளரைச் கூறுகையில், தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை கடல் அலைகளால் சேதமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும், கடற்கரையில் உள்ள ஆளுநர் மாளிகையைச் சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டுவரவும், கடற்கரையில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் தரங்கம்பாடி மேலும் பொலிவு பெறவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடி வந்து டேனிஷ் கோட்டை அமைக்கப்பட்டு 400 ஆண்டுகள் கடந்த நிலையில் அதனைக் கொண்டாடும்விதமாக விரைவில் பெரிய விழா நடத்தவுள்ளதாகவும் இதில் டென்மார்க் நாட்டின் பிரதிநிதியாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: கல்யாணராமனை புழல் சிறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.