ETV Bharat / state

சாலையோர மரங்களை வெட்டியதால் நூற்றுக்கணக்கான குரங்குகள் தவிப்பு - பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர்

நாகை: சீர்காழியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக நெடுஞ்சாலையோரம் இருந்த மரங்கள் வெட்டப்படுவதால் குரங்குள் தவித்து வருகின்றன.

சாலையோரமரங்களை வெட்டியதால் நூற்றுக்கணக்கான குரங்குள் தவிப்பு

author img

By

Published : Mar 16, 2020, 9:04 PM IST

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு என்ற இடத்தில் சீர்காழி - நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான புளியமரம், பனைமரம், வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட மரங்கள் வெட்டி கடத்துவதை தடுத்து நிறுத்திய விவசாயிகள் நான்கு வழிச்சாலைகாக சாலையோரத்தில் இருபுறமும் உள்ள இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதித்த பின்னர் சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்பட வேண்டும் என தடை விதித்துள்ளது.

அந்த தடையினை மீறி ஆளுங்கட்சியினர் திருட்டுத்தனமாக வெட்டுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர். லட்சக்கணக்கான ரூபாய் மரங்கள் அவசர அவசரமாக பொக்லைன் இயந்திரம் மற்றும் நூற்றுக்கணக்கான ஆட்களைக் கொண்டு வெட்டப்பட்டுள்ளதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்த பிறகு மரங்கள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குரங்குகள் தவிப்பு

மேலும், அந்தப் பகுதியில் அதிக அளவில் வாழும் வன விலங்கான குரங்குகள் விரட்டியடிக்கப்பட்டு தற்போது மரங்கள் இல்லாததால் அங்கு உள்ள நூற்றுக்கணக்கான குரங்குகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றன. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு மரங்கள் வெட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: டிக் டாக்கில் போலி கணக்கு- ஜாம்பி நடிகை மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.