ETV Bharat / state

காவிரி மேலாண்மை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவிற்கு நாகை விவசாயிகள் கண்டனம்! - மத்திய அரசு உத்தரவிற்கு நாகை விவசாயிகள் கண்டனம்

நாகை: காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர் வள அமைச்சகத்துடன் இணைக்கும், மத்திய அரசின் உத்தரவிற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காவிரி மேலாண்மை விவகாரம்: மத்திய அரசு உத்தரவிற்கு நாகை விவசாயிகள் கண்டனம்!

author img

By

Published : Apr 29, 2020, 10:56 PM IST

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்ட விவசாயி தமிழ்ச்செல்வன் கூறுகையில், 'விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. காவிரி நீரை நம்பி மட்டுமே இதுநாள் வரை விவசாயம் செய்து வரும் இப்பகுதி விவசாயிகளின் 50 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின் உருவானதே, காவிரி மேலாண்மை ஆணையம். தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு நீர் வள அமைச்சகத்துடன் இணைக்கும் அறிவிப்பு கேட்டு அதிர்ந்து போய்யுள்ளோம்' எனக் கூறினார்.

மேலும், 'காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும் அது இன்று வரை முழுமையாக செயல்படாத நிலையில், இதனை மத்திய நீர் வள அமைச்சகத்துடன் இணைக்கும் செயல் ஏற்புடையதல்ல. இதனால் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய காவிரி நீரானது, கிடைக்காத சூழல் ஏற்படும்.

மத்திய அரசின் உத்தரவிற்கு நாகை விவசாயிகள் கண்டனம்!

அதுமட்டுமின்றி, இந்த அறிவிப்பினை திரும்ப பெறாவிட்டால் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள, இந்தச் சூழலில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, தங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டங்களில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'வங்கிக்கடன் செலுத்தாதவர்களுக்கு ஏன் இந்த விதி பயன்படுத்தப்பட்டது?'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.