ETV Bharat / state

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்த நகராட்சி நிர்வாகம்

நாகை: பலமுறை எச்சரிக்கை விடுத்தும் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு, குத்தகைதாரர்கள் வாடகை செலுத்தாதால், நகராட்சி ஆணையர் முன்னிலையில் அக்கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

municipal-owned-rent-sealed
municipal-owned-rent-sealed
author img

By

Published : Feb 19, 2020, 12:04 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சிக்குச் சொந்தமான 167 கடைகள் உள்ளன. இதில் 80 கடைகளின் குத்தகைதாரர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் முழுமையாகவோ, பகுதியாகவோ வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு மூன்று கட்டமாக நகராட்சி நிர்வாகம் வாடகையைச் செலுத்தக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அதன் பின்னரும், அக்கடைகளின் குத்தகைதாரர்கள் வாடகை கட்டணம் செலுத்தாமலே இருந்துவந்துள்ளனர். இதனால் வாடகை செலுத்தாத கடைகளைப் பூட்டி சீல் வைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது.

நகராட்சிக்கு சொந்தமான வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு

மயிலாடுதுறை காவல் நிலையம் எதிர்ப்புறம் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான கடைகள், பழனிச்சாமி அங்காடியில் உள்ள வாடகை செலுத்தாத கடைகள் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் அண்ணாமலை முன்னிலையில் நகராட்சி அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து வாடகை கட்டணம் செலுத்தாத கடைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தி.மலை அண்ணாமலையார் கோயிலில் உழவாரப்பணி தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.