ETV Bharat / state

பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு.. நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு! - mixing of sewage

Mixing of sewage: மயிலாடுதுறை நகராட்சியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக பாசன வாய்க்காலில் கலப்பதை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலைப் புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

mixing of sewage
பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:25 AM IST

பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கும் கழிவுநீர், பாதாளச் சாக்கடை திட்டத்தின் கீழ் நகராட்சியில் இருந்து அருகாமையில் உள்ள தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி ஊராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து எழுந்து வரும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாளச் சாக்கடை குழாயில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் திடீரென பள்ளம் ஏற்படும் எனவும், இதனால் விபத்துகள் நடைபெறுகின்றது என்று கூறுகின்றனர்.

மேலும், கடந்த 15 ஆண்டுகளாக அந்த சுத்தகரிப்பு நிலையம் செயல்படாத காரணத்தால், கழிவுநீர் அருகாமையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் நேரடியாக திறந்து விடப்படுகிறது எனவும், இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொதுமக்கள் ஆளாகி அவதிக்குட்படுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், இப்பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துலட்சுமி ராஜசேகரன், செம்பனார்கோவில் ஒன்றியக் குழு கூட்டத்தில் பலமுறை வலியுறுத்தியும், இப்பகுதி மக்கள் மூன்று முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆறுபாதி ஊராட்சியில், நேற்று (ஜன.10) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், இப்பகுதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படும் என மேடையில் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து மேடையை விட்டு வெளியே வந்த அமைச்சரிடம், பாதிப்புக்கு காரணமான சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் செல்வதைக் காண்பித்து, அப்பகுதி மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசான ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழுக் கரும்பு மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பினை மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆறுபாதி… pic.twitter.com/a8UBTQ6xCA

    — Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) January 10, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது குறித்து அப்பகுதி ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. அதிகாரிகள் பல பேரிடம் மனு அளித்தும், இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தரப்படாவிட்டால், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க உள்ளோம்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கம்பம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் - சிறப்புச் சார்பு ஆய்வாளருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.