மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பகுதிகளில் வணிகக் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். அரசு அறிவித்த ஊரடங்கில் தளர்வு பிறப்பித்ததில் அனைத்து தரப்பு மக்களும் இயல்பான நிலைக்கு திரும்பினர்.
ஊரடங்கில், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கரோனா பரவல் சீர்காழி பகுதியில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஊழியர்கள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறையினர் ஆகியோர் அவ்வங்கியை பூட்டி சீல் வைத்ததோடு, தொற்று ஏற்பட்டவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த வங்கி அருகில் அதன் ஏடிஎம் மையம் இயங்கி வருவதால், அங்கிருந்து தொற்று பரவ வாய்ப்புள்ளதால் அதையும் மூட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஏ.டி.எம்., இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை!