நீதிமன்றங்கள் இணைய வழியில் செயல்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு, புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் இன்று( மார்ச் 8) ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதில் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 50 பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
இதையும் படிங்க : சட்டப்பேரவைத் தேர்தல் 2021: அரசியல் நிலவரங்கள் உடனுக்குடன்...