ETV Bharat / state

லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு - லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு

மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் லோக் அதாலத் மூலம் 366 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பு
author img

By

Published : Mar 13, 2022, 3:20 PM IST

மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வீதிவிடங்கன் மீது மாயூரம் வட்ட சட்டப்பணிகளின் தலைவராக உள்ள முதன்மை சார்பு நீதிபதி மயிலாடுதுறை காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு மனுவின் மூலமாக பொய்யான வழக்கினை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதையொட்டி வட்ட சட்டப்பணிகள் தலைவரை மாற்ற வலியுறுத்தி நேற்று(மார்ச்.12) மக்கள் நீதிமன்றத்தை புறக்கணிப்பதாகவும் மாயூரம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (மார்ச்.12) மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (மெகா லோக் அதாலத்) நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் நீதிபதி கவுதமன் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரிஸ்வானா பர்வீன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

60-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரணை மேற்கொண்டதில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் 21 வழக்குகளும்,கூடுதல் துணைநீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாவட்ட நீதிமன்றத்தில் 4 வழக்குகளும், முன்சிப்கோர்ட்டில் 2 வழக்குகளும் என்று சாலை விபத்து, நஷ்டஈடு, குடும்ப விவாகரத்து வழக்குகள், காசோலை வழக்குகள் என்று மொத்தம் 37 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ஒரு கோடியே 69 லட்சத்து 77 ஆயிரத்து 651 ரூபாய்க்கு மதிப்புள்ள வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1இல் நீதிபதி அமிர்தம் தலைமையில் 164 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு 63 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2இல் நீதிபதி அப்துல் கனி தலைமையில் 158 வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டு ரூ.25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மாயூரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் வீதிவிடங்கன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து மாயூரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரு வழக்கறிஞர் சங்கத்தினரும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்திருந்த நிலையில், லோக் அதாலத் வழக்கு விசாரணைக்கான வழக்காடிகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருந்த வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு சட்டப்பணிகள் குழுத் தலைவர் நீதிபதி கவுதமன் நன்றி தெரிவித்தார். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 366 வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டது.

இதையும் படிங்க: நெல்மணிகளை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.