ETV Bharat / state

மல்லியம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா! - nagai latest news

நாகை: மயிலாடுதுறை அருகே மல்லியம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

மல்லியம் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

author img

By

Published : Apr 18, 2021, 2:19 PM IST

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் பழமைவாய்ந்த மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வெளியூர்வாசிகள் பலரின் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. இந்தக் கோயில் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில் கிராம மக்களின் முயற்சியால் இன்று (ஏப்.18) குடமுழுக்கு செய்யப்பட்டது.

முன்னதாக, குடமுழுக்கை முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு அன்றிரவு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றன.

தொடர்ந்து நேற்று இரண்டு, மூன்றாம் கால யாக சாலை பூஜை செய்யப்பட்டது. உற்சவ நாளான இன்று காலை நான்காம் கால யாகசலை பூஜையில் மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை காட்டப்பட்டு, பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மேளதாளங்கள் ஒலிக்க மகா குடமுழுக்கு நடைபெற்றது.

மல்லியம் மகா மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

தொடர்ந்து, மூலவருக்கு மகா திருமுழுக்கு செய்யப்பட்டது. இதேபோல், அதே பகுதியில் அமைந்துள்ள ஐயனார், பிடாரி அம்மன் கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: சுவாமி, அம்மன் எழுந்தருளல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.