ETV Bharat / state

மதுபான பாட்டிலில் பசை போன்ற பொருள் - அதிர்ந்த குடிமகன்!

author img

By

Published : Oct 17, 2019, 12:49 PM IST

நாகப்பட்டினம்: அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில், மதுபானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nagapattinam wine shop problems

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.

இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் அந்த மதுபானத்தை திறக்காமல் வைத்துள்ளார். மேலும் அவர் அரசு மதுபானக்கடைகளில் பிராந்தி, விஷ்கி, ரம் உள்ளிட்ட மதுபான பாட்டில் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட, கூடுதலாக 5 ரூபாயும், பீர் மதுபானத்திற்கு 10 ரூபாயும் பெறுவதாக குற்றம் சாட்டினர்.

அரசு மதுபானக் கடையில் பெற்ற மது

இதனிடையே, இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், 'பணம் கொடுத்து மதுபானம் வாங்கியும் தரமற்ற முறையில் உடலுக்கு மிகவும் தீங்கு ஏற்படுத்தக் கூடிய வகையில் இருப்பது வேதனை அளிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும்' என்றும் குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மது வாங்க ஒன்பது மாத குழந்தையை விற்ற தந்தை

Intro:மயிலாடுதுறை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் தரமற்ற முறையில் மதுபானம் குடிமகன்கள் வேதனை:-
Body:நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் பெரம்பூர் டாஸ்மாக் மதுபானக்கடையில் குடிமகன் ஒருவர் வாங்கிய கோல்டன் வாட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான டீலக்ஸ் பிராந்தியை வாங்கி எடுத்து சென்றுள்ளார். அதை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபானத்தில் பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசைபோன்று ஒருபொருள் ஒட்டியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மதுபானத்தை திறக்காமல் வைத்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் பிராந்தி விஷ்கி போன்ற குவாட்டர் மதுபானம் 1க்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட கூடுதலாக 5 ரூபாயும் பீர் மதுபானத்திற்கு 10 ரூபாயும் பெறுவதாக குற்றம்சாட்டும் குடிமகன்கள் காசு கொடுத்து மதுபானம் வாங்கியும் தரமற்ற முறையில் உள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தரமான மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று குடிமகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.