ETV Bharat / state

காரைக்கால் கோயிலில் மாங்கனித் திருவிழா - காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா

புதுச்சேரி: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா மிகவும் எளிமையுடன் நடந்தது.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
author img

By

Published : Jul 4, 2020, 2:00 PM IST

சிவபெருமான் திருவாயால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். அவரின் வாழ்க்கை வரலாற்று ஐதீகம் முறைப்படி திருவிழா ஆண்டுதோறும் காரைக்காலில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு அருகில் காரைக்கால் அம்மையாருக்கு தனிக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இந்தக் கோயிலில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இதில் உள்ளுர் மட்டும் அல்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
விழாவில் கலந்துகொண்டு அதில் இறைவனுக்கு படைக்கப்படும் மாங்கனியை உண்டால் குழந்தை பாக்கியம், திருமணம் என வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதனைத் தொடர்ந்து வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு காணிக்கையாக மாங்கனிகளை இறைவனுக்கு படைத்து வீதியில் பக்தர்களுக்கு இறைத்து வேண்டுதலை நிறைவு செய்வர்.
ஆனால் இந்த ஆண்டு கோவிட்-19 ஊரடங்கால் மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி மிக எளிமையாக கைலாசநாதர் ஆலயத்தின் உள்ளேயே இதுவரை இல்லாதவாறு முதன் முறையாக எளிய முறையில் மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் ஆலயத்தின் உள்ளே வலம்வர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் பக்தர்கள் இன்றி தகுந்த இடைவெளியை பின்பற்றி ஆலய ஊழியர்கள், உபயதாரர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஆண்டுதோறும் விழாவிற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாம்பழ வியாபாரிகள் திரண்டு மாம்பழ விற்பனை மூலம் லாபம் பெறுவர். இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் மாம்பழ வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க: காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண வைபவம்: புதுச்சேரி முதலமைச்சர் சாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.