நாகை மாவட்டம், ஒரத்தூர் கிராமத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து நாகை அரசினர் சுற்றுலா மாளிகையில் அவர் தங்கினார்.
அப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜமாத்துல் கூட்டமைப்பினர், "முதலமைச்சர் பழனிசாமி தங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்