நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் பழமைவாய்ந்த கீழ்பழனி என்று அழைக்கப்படும் சுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. நேற்று இரவு கோயில் குருக்கள் நடராஜ் (50) கோயிலை பூட்டிச்சென்றுள்ளார். இன்று காலை கோயிலை திறக்க வந்த போது கோயிலின் பூட்டு திறந்துள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் நடராஜ் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும் திருடு போய்யிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சீர்காழி காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பெயரில் அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கோயில் பூட்டுகள் உடைக்கப்படாமல் கள்ள சாவிகள் மூலம் திறக்கபட்டு சிலைகள் திருடப்பட்டுள்ளன. எனவே பல நாட்கள் திட்டமிட்டே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ எடைகொண்ட மூன்று பழமைவாய்ந்த சிலைகள் கணாமல் போனது சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:சேலம் நாம மலையில் திடீர் தீ - பல்வேறு மரங்கள் சேதம்