நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல், தொடுவாய், பழையார், பூம்புகார் உள்ளிட்ட 24க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் மீன்பிடித் தொழிலை நம்பியே சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாடு அரசு கரோனா பெருந்தொற்று பரவலை தடுப்பதற்காக ஏப்ரல் மாதம் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்களது படகை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மாதம் மீன்பிடித் தடைக்காலம் 48 நாட்கள் வருகின்றன. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தற்போது அரசு அறிவித்துள்ள ரூ.1000 போதாது எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'வாய்ஸ் காலை இலவசமாக்குங்கள்' - பிரியங்கா காந்தி கோரிக்கை!