நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எரவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மாதவன்(35). இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவரது வீட்டின் அருகே செந்தில்(32), பாக்கிய லெட்மி தம்பதினர் வசித்து வருகின்றனர். திருமணம் ஆகி ஒராண்டு ஆகிறது. இவர்கள் இருவருக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ.22) குடிபோதையில் இருந்த செந்தில், அவரது மனைவியை தாக்க முயற்சித்தார்.
இதைக் கண்ட மாதவன் உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர், தம்பதியினர் சண்டையிடுவதை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில், மாதவனை காலில் கடித்து, கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த மாதவன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குதிரை, நாய், பூனை, எலி கடியை விட மனித கடி விஷம் அதிகம் என்பதால் நாய்கடி ஊசி மூன்று செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 நாய்கடி ஊசி செலுத்த வேண்டும் என்றும், தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குடும்ப சண்டையை தடுக்க சென்ற நபரை கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரை நிர்வாணமாக கொள்ளையடிக்க நோட்டம் பார்த்த நபரின் சிசிடிவி காட்சி