ETV Bharat / state

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

கோடைக் காலம் தொடங்கி விட்டதால் வேளாங்கண்ணிக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். கடல் அலைகளில் குட்டி, சுட்டிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர்.

வேளாங்கண்ணி
author img

By

Published : May 21, 2019, 10:46 PM IST

நாகை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் வேளாங்கண்ணி. வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடக் கலை சுற்றுலாப் பயணிகளை பிரமித்து பார்க்க வைக்கிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், மும்பை, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாய் வரத் தொடங்கியுள்ளனர். வேளாங்கண்ணி அருகே சாலை நெடுகிலும் அமைந்துள்ள கடைகளில் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

வேளாங்கண்ணியில் நிரம்பி வழியும் கூட்டம்

மேலும், வேளாங்கண்ணி மாதாவை அலங்கரிக்கும் அந்த அழகு கடல் அலைகளில் குளித்து, கும்மாளமிட்டும் வருகின்றனர். இதில் சுட்டிக் குழந்தைகள் கோடைவிடுமுறையை குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். வெயில் வாட்டி வதைத்த போதும் வெது, வெதுப்பான கடல் நீரில் தத்தி தாவி சிறு, சிறு அலைகளின் நடுவே அனைவரும் உற்சாக குளியல் போடும் காட்சி பார்ப்பவரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இதுமட்டுமல்ல, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்படும் இரால், நண்டு உள்ளிட்ட மீன்கள் ரூ.50 முதல் ரூ.100 வரை குறைந்த விலைக்கு வேளாங்கண்ணியில் விற்கப்படுகின்றன. அதனை ஒரு கை பார்க்கும் விதமாக சுற்றுலா பயணிகள் மீன்களை ருசித்து, ரசித்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். வேளாங்கண்ணி பழைய மாதா கோவில், பார்க், பீச் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்கி ஒய்வெடுக்க ஏதுவாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான விடுதிகளும் தனியார் தங்கும் விடுதிகளும் அங்கு நிறைவாக உள்ளன.

Intro:கோடைவிடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடலில் குளித்து குட்டி, சுட்டிகள், உற்சாக கொண்டாட்டம்:

Body:கோடைவிடுமுறையையொட்டி வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடலில் குளித்து குட்டி, சுட்டிகள், உற்சாக கொண்டாட்டம்: கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு குடும்பத்துடன் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் பிரசித்திபெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வரத்துவங்கியுள்ளனர். மும்பை, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதலில் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கட்டிடக்கலையை கண்டு பிரமித்து நிற்கும் அவர்கள், அதன் அழகை கண்டு சொக்கி நிற்கின்றனர்.   பின்னர், வழிநெடுகிழும் அமைந்துள்ள கடைகளில் பிடித்த பொருட்களை வாங்கும் சுற்றுலா பயணிகள், காலை, மாலை பொழுதில் அங்குள்ள கடலை கண்டு ரசிக்கின்றனர்.  மேலும், கோடைகாலம் என்பதால் கடலில் கடல்அலைகள் இல்லாமல் குளம்போல் காட்சியளிப்பதால், அங்குள்ள கடலில் இறங்கி கும்மாளம்மிடும் குட்டி, சுட்டிகள் கடலில் குளித்தும், குதூகலித்தும் கோடை விடுமுறையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். வெயில் வாட்டி வதைத்தாலும், வெது, வெதுப்பான கடல் நீரில் தத்தி தாவி சிறு, சிறு அலைகளின் நடுவே அனைவரும் உற்சாக குளியல் போடும் காட்சி தனி அழகே அழகு. வேளாங்கண்ணி கடல் முழுவதும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து புது அனுபவத்தை பெறுகின்றனர். கடற்கரை அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் மூக்கை துழைக்கும் அளவிற்கு, அங்கு வரிசையாக அமைந்திருக்கும் மீன் கடைகளிலிருந்து வாலை மீன், வஞ்சிர மீன் வருவல் வாசம் , அனைவரையும் வா, வா வென அழைக்கிறது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்படும் இரால், நண்டு உள்ளிட்ட மீன்கள் 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை குறைந்த விலைக்கு வேளாங்கண்ணியில் விற்கப்படுகின்றன. அதனை ஒரு கை பார்க்கும் சுற்றுலா பயணிகள் மீன்கள் ருசியாகவும், நிறைவாக உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். வேளாங்கண்ணி பழைய மாதா கோவில், பார்க், பீச் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுவதால், வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் தங்கி ஒய்வெடுக்க ஏதுவாக வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான விடுதிகளும் தனியார் தங்கும் விடுதிகளும் அங்கு நிறைவாக உள்ளன. பேராலய அறைகள் 350 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரை குறைந்த வாடகைக்கும், தனியார் லாட்ஜ் அறைகள் 650, ரூபாயிலிருந்து ஏசி அறைகள் 2100 ரூபாய் வரைக்கும் கொஞ்சம் கூடுதல் வாடகைக்கும் கிடைக்கின்றன.  கட்டிடக்கலை, கடல் அழகு, சுத்தமான காற்று என சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கும் சிறந்த இடம் வேளாங்கண்ணி என்றால் அது மிகையாகாது. பேட்டி: 1. ராஜேஸ்வரி (பெங்களூர்)   2.சுதா (கோவை)  3.அறிவழகன் (கோவை)  4.அருண். மீன் விற்பனையாளர் (வேளாங்கண்ணி) 5.டோமின் (கர்நாடகா)

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.