ETV Bharat / state

வதான்யேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா தருமபுரம் ஆதினம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

குரு பெயர்ச்சி விழா
குரு பெயர்ச்சி விழா
author img

By

Published : Apr 14, 2022, 9:40 AM IST

மயிலாடுதுறை: நவகிரகங்களில் தேவகுருவான குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்கின்றார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் புண்ணியம் அடைவதாக ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று (ஏப். 14) அதிகாலை குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சரியாக 4.16 மணிக்கு இடம் பெயர்ந்தார். தனக்காரகன், புத்திரக்காரகன் என்று அழைக்கப்படும் குருபகவானை சிவாலயங்களில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி சன்னிதியில் வழிபாடு நடத்துவதன் மூலம் சிறப்பான பலன்களை அடையமுடியும்.

குரு பெயர்ச்சி விழா

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில், தனி சந்நதியில் எழுந்தருளியுள்ள அநூக்கிரகஸ்தலமான மேதா தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றம் பஞ்சமுக அர்ச்சனை நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை, பஞ்சமுக தீபாரதனை செய்யப்பட்டது. தருமபுரம் ஆதினம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.