நாகை மாவட்டத்தில் உள்ள இளைஞர் சமூக விழிப்புணர்வு மையம், சார்பில் கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் கிராமங்களில் ஆய்வு நடத்தி அதற்கான அறிக்கையை 'மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் மாண்பு' என்ற தலைப்பில் வெளியிட்டது.
நாகை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் செல்வராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி வன்னியரசு ஆகியோர் அறிக்கையை பெற்றுக்கொண்டனர்.
பின்னர், நிகழ்ச்சியில, பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கு வீடுகள் கட்ட 10 சென்ட் நிலம் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கோயில் நிலங்களில் வசித்தவர்கள் அனைவருக்கும் வீடு கட்ட உதவியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இதில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.