ETV Bharat / state

தொழிலாளி கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பணிக்குச் சென்ற தொழிலாளியை கடத்திய வழக்கில் தொடர்புடைய பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற நபர் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author img

By

Published : Nov 20, 2020, 12:49 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பாரதி தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் சங்கர்(48). உள் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுவரும் (டெக்கரேஷன்) தொழிலாளியான இவர், கடந்த 7ஆம் தேதி பணிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றார். பணி முடித்து மாலை வீடு திரும்பியபோது, திருவாரூர் ரோடு கேணிக்கரை அருகில் ஏற்கனவே நின்றுகொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலர் சங்கரை வழிமறித்து, காரில் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து சங்கரின் மகள் சந்திகா அளித்த புகாரின்பேரில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் சங்கரை கடத்தியவர்கள் மறுநாள்(நவ.8) காரில் இறக்கி விட்டுச் சென்றனர். விசாரணையில் சங்கரின் மகள் சந்திகாவின் கணவர் முகமது ஹாஜா தாவூத்துக்கு திடீரென்று அதிகளவில் பணம் கிடைத்ததாகவும், இத்தகவல் காரைக்காலைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் அமிகோ ஜுலியஸ் (40) என்பவருக்கு தெரியவந்ததால், அவர் சங்கரை கடத்தியதாகத் தெரியவந்தது.

பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவரான ஆரோக்கியராஜ் அமிகோ ஜுலியஸ், பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச் செல்வதற்காக கொச்சின் விமான நிலையத்திற்குச் சென்றபோது, தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், காரைக்கால் கல்லரைபேட் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் சுரேஷ் என்கிற சூர்யா (43), ஜெபஸ்தீன் மகன் ரீகான் என்கிற லாசர் (32), ஆரோக்கியநாதன் மகன் டேவிட் வின்சென்ட் (21) ஆகிய மூவரையும் நேற்று (நவ.19) கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தனிப்படையினர், ஹவாலா பணம் கொடுக்கல், வாங்கல் காரணமாக, கடத்தல் சம்பவம் நடைபெற்றததா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்கிற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.