மயிலாடுதுறையில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், புதிய வேளாண் சட்டங்களைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டுள்ளனர்.
முன்னதாக, போராட்டக் களத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலை காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டக் குழுவினர் தாங்களே அகற்றினர்.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு: தமிழ்நாடு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்